ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை

Published On 2024-11-04 08:11 IST   |   Update On 2024-11-04 08:12:00 IST

3.11.2024 முதல் 9.11.2024 வரை

மட்டற்ற மகிழ்ச்சியோடு நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சுக்ரன் அஷ்டம ஸ்தானம் சென்று தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். பற்றாக்குறை வருமானத்தில் வாழ்ந்த குடும்பம் நிறைவான வருமானத்துடன் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் குறையும். அரசு வேலை முயற்சி பலிதமாகும். வாழ்க்கைத் துணைக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும்.புதிய சொத்துக்கள் சேரும். சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

உடன் பிறந்தவர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். தம்பதிகள் ஒற்றுமை சிறக்கும் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் வைத்தியத்தில் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 5.11.2024 அன்று காலை 9.45 மணி முதல் 7.11.2024 அன்று மாலை 5.53 மணி வரை சந்திராஷ்ட மம் இருப்பதால் மன அமைதி குறைவு உண்டா கலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது அர்த்தநாரீஸ்வரரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News