ரிஷபம் - வார பலன்கள்

வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

Published On 2024-12-23 07:45 IST   |   Update On 2024-12-23 07:46:00 IST

22.12.2024 முதல் 28.12.2024 வரை

பொருளாதார பற்றாக்குறைகள் அகலும் வாரம். 2,5ம் அதிபதி புதன் ராசிக்கு 7ல் குரு மற்றும் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பெண்கள் கணவரின் பரிசளிப்பால் குதூகலத்துடன் இருப்பார்கள்.தடைபட்ட வாடகை வருமானம், நிலுவையில் உள்ள சம்பள பாக்கி வராக்கடன்கள் வந்து சேரும். தொழில் துறையில், வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாம் சிறப்பாக நிறைவேறும். தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும்.

உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும். முக்கியமான தேவைகள் நிறைவேறும். வீடு, கட்டிடம் சம்பந்தமான பணிகளில் ஆதாயம் உண்டு. சிலருக்கு வேலை மாற்றும் சிந்தனை அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். விருப்ப விவாகத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். 29.12.2024 அன்று இரவு 11.22க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News