தீவிர டெஸ்டிங்கில் கிரெட்டா EV - ரேன்ஜ் எவ்வளவு தெரியுமா?
- ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தகவல்.
- சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், ஹூண்டாய் கிரெட்டா EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
தற்போதைய ஸ்பை படங்களில் கிரெட்டா EV மாடலின் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், நோஸ் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.
கிரெட்டா EV மாடலில் ஏரோடைனமிக் திறன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. உள்புறம் கிரெட்டா EV மாடலின் சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கிரெட்டா EV மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்றும் இவற்றை எல்.ஜி. நிறுவனம் வினியோகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இது எம்.ஜி. ZS EV மாடலில் உள்ள 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட அளவில் சிறியதாகும்.