கார்

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய டாடா நெக்சான் EV

Published On 2023-06-28 12:29 IST   |   Update On 2023-06-28 12:29:00 IST
  • இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
  • நெக்சான் EV பிரைம் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.9 நொடிகளில் எட்டிவிடும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் நெக்சான் EV மாடல் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 2020 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நெக்சான் EV சீரிஸ் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 54 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நெக்சான் EV பிரைம் மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த வேரியன்ட் முழு சார்ஜ் செய்தால் 453 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

இரண்டு வெர்ஷன்களிலும் IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. நெக்சான் EV பிரைம் மாடலை டிசி ஃபாஸ்ட் சார்ஜ் மூலம் 60 நிமிடங்களில் 10-இல் இருந்து 60 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். EV மேக்ஸ் மாடலை 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 56 நிமிடங்களில் 86 சதவீதம் வரை சார்ஜ் செய்திடலாம்.

டாடா நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்கள் முறையே 129 ஹெச்பி பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 143 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. நெக்சான் EV பிரைம் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.9 நொடிகளில் எட்டிவிடும். EV மேக்ஸ் மாடல் இதே வேகத்தை ஒன்பது நொடிகளில் எட்டிவிடும். 

Tags:    

Similar News