மது பழக்கத்தால் பல கோடி குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன-நடிகை வனிதா
- டெக்னாலஜி காரணமாக எதையும் நாம் தடுக்க முடியாது.
- எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.
வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் 'லோக்கல் சரக்கு'. இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமன வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்தபட விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்,
இன்று சினிமாவுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க கூடிய குழுவை கொண்டவர் ராஜேஷ் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நான் இன்று தான் தெரிந்துக்கொண்டேன்.
படத்தின் கதைக்களமும் எதார்த்தமானதாக இருக்கிறது. லைப் ஸ்டைல் என்பது வேறு, பழக்கம் என்பது வேறு, எனவே எதையும் நம்மால் மாற்ற முடியாது. டெக்னாலஜி காரணமாக எதையும் நாம் தடுக்க முடியாது. அதனால் கெட்டுப்போறவங்க கெட்டுபோக தான் செய்வாங்க, அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர், அதற்கும் கீழே இருப்பவர்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால், எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. அது இவ்வளவு பெரிய பிரச்சினைகளை கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் தெரியும். எனவே மதுவால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக நன்றாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும்." என்றார்.