சினிமா செய்திகள்

`70 மற்றும் 90 வயது பெண்களின் அறைக்கதவையும் தட்டுவார்கள்'-நடிகை சாந்தி வில்லியம்ஸ்

Published On 2024-08-29 07:57 GMT   |   Update On 2024-08-29 07:57 GMT
  • பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை.
  • மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்ப மில்லை.

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர்.

பாலியல் தொல்லைக்கு உள்ளான நடிகைகள்-பெண் கலைஞர்களுக்கு மலையாள மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தமிழ் நடிகையான சாந்தி வில்லியம்சும் கருத்து தெரிவித்துள்ளார்.

இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடத்துள்ளார். இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். கேரளாவில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்ப மில்லை. காரணம் இங்கு அரசியல் அதிகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. இங்குள்ளவர்கள் 60, 70 மற்றம் 90 வயதுடைய பெண்களின் அறைகளுக்கு கூட இரவில் வந்து கதவை தட்டுகிறார்கள்.

இது எனக்கு பிடிக்காத விஷயம். நான் சில காலமாக படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் திரையுலகத்தில் அப்படி இல்லை. அவர்கள் ஒருபோதும் எங்களின் கதவுகளை தட்டவில்லை. எங்களிடம் தவறாகவும் நடந்து கொண்டதில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News