பிறந்தநாளில் அரை சதம் விளாசிய இந்திரஜித்- சேலம் அணிக்கு 150 ரன்கள் இலக்கு
- சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர்.
- சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக சிவம் சிங் - அஸ்வின் களமிறங்கினர். சிவம் சிங் 2 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து பாபா இந்திரஜித் - விமல் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் விமல் குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர். அவர் 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இதனால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.