null
சாம்பியன்ஸ் டிராபி: கான்வே, கேன் வில்லியம்சன் ஏமாற்றம்- வில் யங் அரைசதம்
- கான்வே 10 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
- வில் யங் 56 பந்தில் அரைசதம் கடந்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் தொடங்கியது. நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 17 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து 40 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இவரும் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். டேரில் மிட்செல் 10 ரன்னில் ஹாரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே நியூசிலாந்து 10 ஓவரில 48 ரன்கள் சேர்த்தது. 11 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, வில் யங் 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 22.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
நியூசிலாந்து 28.4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுது்து விளையாடி வருகிறது. டாம் லாதம் 25 ரன்களுடனும், வில் யங் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.