கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: சதம் விளாசினார் நியூசிலாந்து வீரர் வில் யங்
- 59 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 113 பந்தில் சதம் விளாசினார்.
- 107 ரன்னில் ஆட்டமிழந்தார். யங்- டாம் லாதம் ஜோடி 118 ரன்கள் குவித்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் வில் யங் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கினார். கான்வே (10), கேன் வில்லியம்சன் (1), டேரில் மிட்செல் (10) சொதப்பினாலும் மறுமுனையில் யங் நம்பிக்கையுடன் விளைாடினார்.
56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த வில் யங் 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் டாம் லாதம் 59 பந்தில் அரைசதம் அடித்தார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 37.2 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங்- டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.