இறுதிப்போட்டி லக்னோவில் நடந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்- அகிலேஷ் யாதவ்
- இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நடத்தியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- இறுதிப்போட்டி லக்னோவில் நடைபெற்று இருந்தால் இந்திய அணிக்கு பலரது ஆசிர்வாதம் கிடைத்திருக்கும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நடத்தியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அரசியல் ரீதியாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
குஜராத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி லக்னோவில் நடைபெற்று இருந்தால் இந்திய அணிக்கு பலரது ஆசிர்வாதம் கிடைத்திருக்கும். பகவான் விஷ்ணு மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆசிர்வாதமும் இருந்திருக்கும். இந்தியா உலக கோப்பையையும் வென்று இருக்கும். தற்போது ஆடுகளத்தில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.