கிரிக்கெட் (Cricket)
null

கடைசி டெஸ்ட்டில் ரோகித் விளையாடுவாரா? மலுப்பிய கவுதம் கம்பீர்

Published On 2025-01-02 07:18 GMT   |   Update On 2025-01-02 07:27 GMT
  • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.
  • இப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரோகித் சர்மா பங்கேற்காமல் கம்பீர் மட்டுமே பங்கேற்றார்.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்காமல், அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மட்டுமே பங்கேற்றார்.

இது குறித்து எழுப்பட்ட கேள்வி பதிலளித்த கம்பீர், ரோகித்துடன் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதேசமயம் செய்தியாளர் சந்திப்பில் அணியின் கேப்டன் பங்கேற்க வேண்டும் என்பது பாரம்பரியமானது என்று நான் நினைக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பில் அணியின் தலைமை பயிற்சியாளர் பங்கேற்றாலே போதுமானது என நினைக்கிறேன் என்று கூறினார்.

ரோகித் சர்மா கடைசி போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கம்பீர், நாளை நாங்கள் மைதானத்தின் பிட்சை பார்த்த பிறகு எங்களின் அணியில் விளையாடும் வீரர்களை இறுதி செய்யப்போகிறோம் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News