கிரிக்கெட் (Cricket)
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் லேசான தடியடி
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.
- நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான டிக்கெட்டுகளும் ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகளும் கவுண்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் கணிசமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர். கட்டுகடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.