கிரிக்கெட் (Cricket)
சச்சின் மகனுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படுமா? - பயிற்சியாளர் பவுச்சர் பதில்
- அர்ஜூன் காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார்.
- பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம்.
மும்பை:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை.
நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மார்க் பவுச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது:-
காயத்தில் இருந்து அர்ஜூன் மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன்.
எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.