கிரிக்கெட்

கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித்சர்மா

Published On 2024-06-30 07:50 GMT   |   Update On 2024-06-30 07:50 GMT
  • 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
  • 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

முன்னதாக டோனி தலை மையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

டோனி 3 ஐ.சி.சி. கோப்பை யையும் (2007 இருபது ஓவர் உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி), கபில்தேவ் (1983 ஒருநாள் போட்டி உலக கோப்பை), ரோகித் சர்மா (2024 இருபது ஓவர் உலக கோப்பை தலா ஒரு ஐ.சி.சி. கோப்பையை யும் பெற்றுக் கொடுத்தனர்.

சாம்பியன் பட்டம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தெண் டுல்கர், டோனி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News