கிரிக்கெட் (Cricket)
null

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை கிங்ஸ்

Published On 2024-07-05 17:29 GMT   |   Update On 2024-07-05 17:30 GMT
  • 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
  • அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சேலம்:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார்- ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். 2-வது பந்திலேயே சந்தோஷ் குமார் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த பாபா அப்ரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மறுமுனையில் தடுமாற்றத்துடன் விளையாடிய ஜெகதீஷன் 22 பந்தில் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் அப்ரஜித் 38 ரன்னில் அவுட் ஆனர்.

அடுத்து வந்த டேரில் ஃபெராரியோ வித்தியசமான முறையில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய ஜிதேந்திர குமார் 21 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் சதீஷ் மற்றும் அபிஷேக் தன்வர் வெற்றிக்காக போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கோவை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News