கிரிக்கெட் (Cricket)

இரட்டை சதம் தவறவிட்ட அபிமன்யு: ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட்

Published On 2024-10-04 21:53 GMT   |   Update On 2024-10-04 21:53 GMT
  • முதலில் ஆடிய மும்பை அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

லக்னோ:

இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்191 ரன்னில் ஆட்டமிழந்தார். துருவ் ஜுரல் 93 ரன்னும், சாய் சுதர்சன், இஷான் கிஷன் தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான் தலா 3 விக்கெட்டும், மோகித் அவஸ்தி 2விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி நான்காம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 76 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் சரன்ஷ் ஜெயின் 4 விக்கெட்டும், மனவ் சுதார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News