கிரிக்கெட்

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Published On 2024-07-05 13:18 GMT   |   Update On 2024-07-05 13:18 GMT
  • 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவித்தார் ஜெய்ஷா.

மும்பை:

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

இந்திய வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

Tags:    

Similar News