கிரிக்கெட் (Cricket)

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?: இரட்டை சதமடித்த அதிரடி வீரரின் மகன்

Published On 2024-11-21 17:23 GMT   |   Update On 2024-11-21 17:23 GMT
  • முதலில் ஆடிய மேகாலயா 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 468 ரன்களைக் குவித்துள்ளது.

ஷில்லாங்:

இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு போட்டிகளில் ஒன்று கூச்பெஹார் டிராபி. இது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 4 நாள் கொண்ட போட்டி ஆகும்.

இதில் அருணாசல பிரதேசத்தின் ஷில்லாங் நகரில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் டெல்லி, மேகாலயா அணிகள் மோதின.

முதலில் ஆடிய மேகாலயா அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, டெல்லி அணி முதல் இன்னிங்சை ஆடியது. அர்னவ் புக்கா, ஆர்யவீர் ஜோடி அதிரடியாக ஆடியது. சதமடித்து அசத்திய புக்கா 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய ஆர்யவீர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு தன்யா நக்ரா நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் குவித்துள்ளது. ஆர்யவீர் 200 ரன்னுடனும், தன்யா நக்ரா 98 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆர்யவீர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News