விபத்தால் அல்ல... பேட்ஸ்மேன் அடித்த பந்தால் கொடூரமாக மாறிப்போன நடுவர் முகம்
- பேட்ஸ்மேன் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடிய பந்து முகத்தில் பலமாக தாக்கியது.
- அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.
மேற்கு ஆஸ்திரேலியாவின் புறநகர் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து நடுவரின் முகத்தை மிகவும் கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சார்லஸ் வெர்யார்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சீனியர் நடுவரான டோனி டிநொப்ரேகா நடுவராக பணியாற்றினார். அப்போது பேட்ஸ்மேன் நேராக (Straight Drive) அடித்த பந்து, டோனியின் முகத்தின் பயங்கரமாக தாக்கியது. இதனால் நடுவர் நிலைகுலைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முதலுதவி செய்த மருத்துவர்கள் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதா? என பரிசோதனை செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை ஏதும் தேவையில்லாத நிலையில், மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இந்த கொடூரமான சம்பவத்தில் இருந்து டோனி விரைவில் குணமடைய வாழ்த்துவோம், விரைவில் அவர் எழுந்து வருவார் என எதிர்பார்க்கிறோம். நடுவர் குழு உங்களுக்கு பின்னால் உள்ளது என மேற்கு ஆஸ்திரேலியா புறநகர் கிரிக்கெட் சங்கம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.