கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பந்துவீச்சில் சொதப்பல்.. 3 புள்ளிகளை இழந்த நியூசிலாந்து

Published On 2024-12-03 12:23 GMT   |   Update On 2024-12-03 12:23 GMT
  • புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகியவை உள்ளன.
  • நியூசிலாந்துக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது.

துபாய்:

ஐசிசி நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.

இதற்கிடையே, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளைக் குறைத்துள்ளது.

இதனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News