கிரிக்கெட் (Cricket)

வலை பயிற்சியில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு காயம்- வைரல் வீடியோ

Published On 2024-12-03 08:32 GMT   |   Update On 2024-12-03 08:32 GMT
  • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
  • இதற்காக இரு அணி வீரர்களும் அடிலெய்டில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா -இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இரு அணி வீரர்களும் அடிலெய்டில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித், மார்னஸ் லபுஷேன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்மித்-க்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அந்த அணியின் பிசியோ தெரபிஸ்ட் கண்காணித்தார். இதனையடுத்து அவர் வலைபயிற்சியில் இருந்து வெளியேறினார்.

இருவருக்கும் காயம் எந்த அளவு இருக்கிறது என்பது குறித்து சரியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News