அவர்கள் மண்ணில் தோற்கடிக்கனும்.. அதுதான் இந்தியாவுக்கு சரியான பதிலடியா இருக்கும்- அக்தர்
- இந்தியாவை இப்படி அதிகாரம் மற்றும் பணத்தால் தோற்கடிக்க முடியாது.
- இந்தியாவுக்கு நாம் சென்று அவர்களை வீழ்த்த வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. 2008-க்குப்பின் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா 2023 ஆசியக் கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடியது.
அதே போல இம்முறை தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா விரும்பியது போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்திய செய்திகள் காணப்படுகிறது. -
இந்நிலையில் இந்தியாவுக்கு சென்று அவர்களை அவர்களது மக்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வீழ்த்துவதே சரியான பதிலடி மற்றும் பழிக்கு பழியாக இருக்கும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
ஒரு தொடரை நடத்தும் போது அதற்காக நீங்கள் வருமானத்தைப் பெறுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். எனவே பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு நியாயமானது. அவர்கள் தங்களுடைய நிலையில் வலுவாக இருக்க வேண்டும்.
இந்தியாவை இப்படி அதிகாரம் மற்றும் பணத்தால் தோற்கடிக்க முடியாது.
சாம்பியன்ஸ் டிராபியை நம் நாட்டில் நடத்த முடிந்தவுடன் இந்தியா வர விரும்பவில்லை என்றால் அவர்கள் வருவாயை எங்களுடன் அதிக விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நல்ல அழைப்பு. அதே சமயம் இந்தியாவில் நாம் வருங்காலங்களில் நட்புடன் விளையாட வேண்டும்.
என்னுடைய நம்பிக்கை எப்போதும் என்னவெனில் இந்தியாவுக்கு நாம் சென்று அவர்களை வீழ்த்த வேண்டும். இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும். சாம்பியன்ஸ் ட்ராபி ஹைபிரிட் மாடலில் நடைபெறுவது ஏற்கனவே கையெழுத்து ஆகிவிட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
என்று கூறினார்.