கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்டில் வங்காளதேசம் 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2024-12-04 06:50 GMT   |   Update On 2024-12-04 06:50 GMT
  • 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக் கில் சம நிலையில் முடிந்தது.
  • அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 164 ரன்னிலும், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 146 ரன்னிலும் சுருண்டன.18 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வங்காள தேசம் 268 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீ சுக்கு 287 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜாகர் அலி 91 ரன் எடுத்தார்.

287 ரன் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை ஆடியது.

வங்காளதேச வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி 185 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு வங்காளதேசம் பதிலடி கொடுத்தது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 201 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக் கில் சம நிலையில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வங்காளதேசம் 3-வது வெற்றியை டெஸ்டில் பதிவு செய்தது.

அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

Tags:    

Similar News