சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா
- சாரா டெண்டுல்கர் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
- இவர் தனது தந்தையின் அறக்கட்டளையின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி இருந்து வருகிறார்.
இந்நிலையில், சச்சினின் மகளான சாரவும் தற்போது அறக்கட்டளையில் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது மகள் சாரா டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். விளையாட்டு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவை மேம்படுத்தும் பயணத்தை அவர் தொடங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.