null
தோனியுடன் பேசி 10 வருடங்கள் ஆகிறது.. காரணம் இதுதான் - ஹர்பஜன் சிங் குமுறல்
- 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக இருந்தனர்
- என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களிடம் நான் தொடர்வில் உள்ளேன்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் 10 வருடங்களாகப் பேசவில்லை என ஹர்பஜன் சிங் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்திய முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்பஜனும் எம்எஸ் தோனியும் ஒன்றாக செயல்பட்டவர்கள்.
இந்நிலையில் 2018-2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய காலங்களில் தானும் எம்.எஸ் தோனியும் மைதானத்தில் பேசினோமே தவிர களத்திற்கு வெளியே பேசிக்கொள்வதில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
'அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் போன் காலை அட்டென்ட் செய்பவர்களுக்கு மட்டுமே நான் போன் செய்வேன், மற்றவர்களிடம் பேச எனக்கு நேரமில்லை. என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். உறவு என்பது இருவருக்கிடையிலான கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்டது.
நான் உங்களுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், பதிலாக நீங்கள் எனக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நான் நம்ப வேண்டும், அல்லது எனக்கு பதில் அளிப்பீர்கள் என்றாவது உறுதியாகத் தெரிய வேண்டும்.
நான் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை போன் செய்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், நான் உங்களை தேவை இருந்தால் மட்டுமே சந்திப்பேன் மற்றபடி எதுவும் இல்லை என்று ஹர்பஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.