விளையாட்டு

வினோத் காம்ப்ளியை சந்தித்து நலம் விசாரித்த சச்சின்- வீடியோ வைரல்

Published On 2024-12-04 03:03 GMT   |   Update On 2024-12-04 03:03 GMT
  • ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடம் திறப்பு விழா சிவாஜி பூங்காவில் நடைபெற்றது.
  • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நண்பருமான வினோத் காம்ப்ளியை சந்தித்து சச்சின் டெண்டுல்கர் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த மறைந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடம் திறப்பு விழா சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சச்சின் டெண்டுல்கர் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்த சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தனது நண்பருமான வினோத் காம்ப்ளியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது வினோத் காம்ப்ளி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெண்டுல்கரும், காம்ப்ளியும் பள்ளி பருவத்தில் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News