விளையாட்டு
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் ரஜாவத் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதினார்.
இதில் ரஜாவத் 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.