ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்- ஷபாலி வர்மா அதிரடி நீக்கம்
- இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் மட்டுமே ஷபாலி வர்மா எடுத்துள்ளார்.
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில போட்டிகளில் சொதப்பிய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்துள்ளார்.
காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் விலகி உள்ளார். மேலும் கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதில் விளையாடிய அணியில் இருந்து உமா செத்ரி, தயாளன் ஹேமலதா, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் சயாலி சத்கரே ஆகிய நான்கு பேர் இடம் பெறவில்லை.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி , பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்.