கிரிக்கெட் (Cricket)
காயம் காரணமாக டெல்லியுடனான போட்டியில் இருந்து மயங்க் யாதவ் விலகல்
- லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
- ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம்.
ஐ.பி.எல். 2024 தொடரில் லக்னோ அணிக்காக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில் காயம் காரணமாக மயங்க் யாதவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மயங்க் யாதவ் லக்னோ அணி விளையாட உள்ள அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.