பிப்ரவரி மாதத்துக்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வென்றார் சுப்மன் கில்
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
- பிப்ரவரி மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரை செய்யப்பட்டார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.