கிரிக்கெட் (Cricket)

சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ்.டோனியின் 200வது போட்டி - நினைவு பரிசு வழங்கிய சீனிவாசன்

Published On 2023-04-12 19:28 IST   |   Update On 2023-04-12 19:28:00 IST
  • சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் எம்.எஸ்.டோனி களமிறங்கினார்.
  • டோனிக்கு சி.எஸ்.கே. அணி உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.

சென்னை:

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்யுயுள்ளார்.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும். 2010, 2011, 2018 மற்றும் 2021 என 4 முறை டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே.

2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் களமிறங்கிய எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அணி வீரர்களும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Tags:    

Similar News