கிரிக்கெட் (Cricket)

முச்சதம் விளாசிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர்

Published On 2024-02-26 14:56 IST   |   Update On 2024-02-26 14:56:00 IST
  • அவரை கடந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
  • 12 சிக்சர்கள், 33 பவுண்டரிகளுடன் 312 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

23 வயதுக்குட்பட்டோருக்கான சிகே நாயுடு கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத் - சவுராஸ்டிரா அணிகள் இடையேயான போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. காலிறுதி ஆட்டமான இந்த போட்டியில் டாஸ் வென்ற சவுராஸ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய உத்திரபிரதேசம் அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 426 ரன்கள் சேர்த்தது.

இதனை தொடர்ந்து 2-வது நாள் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் ரிஸ்வி முச்சதம் அடித்து (312) அவுட் ஆனார். இதில் 33 பவுண்டரிகளும் 12 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடி வரும் உத்திர பிரதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 730 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. ரிஸ்வியின் முச்சதத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏனென்றால் இந்த ஆண்டுக்கான சிஎஸ்கே அணியில் சமீர் ரிஸ்வி இடம் பெற்றுள்ளார். அவரை கடந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. டோனி தலைமையில் இளம் வயதான ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News