கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் செல்வது குறித்து பி.சி.சி.ஐ. முடிவு செய்யும்- ரோகித் சர்மா பேட்டி

Published On 2022-10-22 07:17 GMT   |   Update On 2022-10-22 07:17 GMT
  • ஐ.சி.சி. போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
  • ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயார்

மெல்போர்ன்:

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய தயங்கவில்லை. தற்போதைய ஆட்ட நிலை மற்றும் செயல்படும் தன்மையை பொறுத்து தேர்வு நடைபெறுகிறது.

ஐ.சி.சி. போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அழுத்தம் நிலையானது. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது சவாலானது. 9 ஆண்டுகளாக ஐ.சி.சி. போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. இது ஏமாற்றமே.

ஆசிய கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது பற்றி பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தான் முடிவு செய்யும். பாகிஸ்தான் செல்வது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.

நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்வது பற்றி மட்டுமே தற்போது யோசித்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Tags:    

Similar News