கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி அறிவிப்பு

Published On 2025-01-13 03:46 IST   |   Update On 2025-01-13 03:46:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது.
  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லிங்டன்:

8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் சீனியர் வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சீயர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.

Tags:    

Similar News