கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். 2025: பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

Published On 2025-01-12 23:44 IST   |   Update On 2025-01-12 23:44:00 IST
  • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது.
  • இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

சண்டிகர்:

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் யார் என்ற விவரத்தை அணி நிர்வாகம் இன்று அறிவித்தது.

இந்நிலையில், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

ஐ.பி.எல். வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2-வது வீரர் என்ற பெருமையை பெற்ற ஷ்ரேயாஸ் அய்யர், பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News