கிரிக்கெட் (Cricket)
null

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிப்பு?

Published On 2025-01-12 20:50 IST   |   Update On 2025-01-12 20:53:00 IST
  • சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் மோதுகின்றன.
  • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி துவங்குகிறது. இந்தத் தொடர் மார்ச் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வருகிற 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தொடருக்கான எட்டு அணிகளும் இரண்டாக பிரிக்கப்படுகின்றன. இதில் க்ரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

Tags:    

Similar News