கிரிக்கெட் (Cricket)

கபில்தேவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றேன் - யுவராஜ் சிங் தந்தை பகீர் தகவல்

Published On 2025-01-12 18:46 IST   |   Update On 2025-01-12 18:46:00 IST
  • என் துப்பாக்கியை எடுத்து கொண்டு கபில்தேவ் வீட்டிற்கு சென்றேன்.
  • இனிமேல் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று முடிவு எடுத்தேன்.

இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தான். அவர் ஒரு டெஸ்ட் போட்டி, 6 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். சொல்லப்போனால் தந்தையின் வழியை பின்பற்றி தான் யுவராஜ் சிங் கிரிக்கெட்டிற்குள் நுழைந்தார்.

இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில்தேவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய யோக்ராஜ் சிங், "கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே சமயத்தில் நார்த் ஜோன், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்த காரணமும் சொல்லாமல் அணியில் இருந்து என்னை அவர் நீக்கினார்.

இது தொடர்பாக பல கபில்தேவிடம் பல கேள்விகளை கேட்க என் மனைவி விரும்பினார். அப்போது கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று அவளிடம் கூறினேன். உடனே என் துப்பாக்கியை எடுத்து கொண்டு கபில்தேவ் வீட்டிற்கு சென்றேன். அப்போது கபில்தேவ் அவரது அம்மாவுடன் வெளியே வந்தார்.

அப்போது கபில்தேவை திட்டி தீர்த்தேன். உன்னால் ஒரு நண்பரை இழந்துவிட்டேன். இன்று நீங்கள் செய்ததற்கான பலனை ஒருநாள் நிச்சயம் அனுபவிப்பீர்கள் என்று கூறினேன்.

உன் தலையில் சுடுவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்தேன். ஆனால் உனக்கு பக்திமிக்க அம்மா இருக்கிறார். இதனால் உன்னை சுடவில்லை என்று கூறினேன்

அதன்பிறகு தான் இனிமேல் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று முடிவு எடுத்தேன். என் மகன் யுவராஜ் சிங்கை கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

2011ல் இந்திய அணி உலகக் கோப்பை வென்ற போது கபில்தேவுக்கு ஒரு நாளிதழ் செய்தியை அனுப்பினேன். அதில், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் உங்களை விட எனது மகன் சாதித்துவிட்டான் என்று கூறியிருந்தேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News