கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: கருண் நாயர், துருவ் ஷோரே சதத்தால் அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா

Published On 2025-01-12 23:32 IST   |   Update On 2025-01-12 23:32:00 IST
  • இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், விதர்பா அணிகள் மோதின.
  • இதில் விதர்பா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

வதோதரா:

32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்றும் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், மஹிபால் லாம்ரோர் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்தது. கார்த்திக் சர்மா அரை சதமடித்து 62 ரன்னும், ஷப்னம் கர்வால் அரை சதம் கடந்து 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

விதர்பா அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரே நிலைத்து நின்று ஆடி சதமடித்தார்.

கேப்டன் கருண் நாயர் அதிரடியாக ஆடி 122 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 292 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது துருவ் ஷோரேவுக்கு வழங்கப்பட்டது.

மற்றொரு அரையிறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News