திடீரென எம்.எஸ்.டோனியை புகழ்ந்து பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை
- மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக தோனியை பார்க்கிறேன்.
- தோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் திடீரென எம்.எஸ். டோனியை புகழ்ந்து யோக்ராஜ் சிங் பேசியுள்ளார்.
டோனி பற்றி பேசிய யோக்ராஜ் சிங், "மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக டோனியை பார்க்கிறேன். அவரிடம் பிடித்ததே, எப்படி பந்து வீசினால் விக்கெட் விழும் என்பதை அறிந்து பவுலரிடம் அப்படியே சொல்லி விக்கெட் எடுத்ததுதான்.
டோனி பயமற்றவராக இருக்கிறார். ஒருமுறை ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் அவரை பணத்தால் அதற்கு அடுத்த பந்திலேயே டோனி சிக்சர் அடித்தார். டோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.