- அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.
- பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.
திருநாராயணபுரத்து மக்களிடம் பிரியாவிடை பெற்று உடையவர் திருவரங்கத்திற்கு பயணமானார்.
மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளிய ராமானுஜருக்கு ஆண்டாள் பாசுரம் ஒன்று நினைவுக்கு வந்தது.
அப்பாசுரத்தில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பொருமாளுக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறுதடா வெண்ணையும் பிறவும் படைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டாள் தன் பாசுரத்தில் குறிப்பிட்டவாறு, உடையவர் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறுதடா அக்காரஅடிசில் செய்து நிவேதித்தார்.
அத்துடன் நூறுதடா வெண்ணையும் பிறவும் படைத்தார்.
அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.
பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.
அங்கு ஆண்டாளைச் சேவிக்கச் சென்ற ராமானுஜரை ஆண்டாள் பிராட்டி, "வருக என் அண்ணனே" என்று வாயார அழைத்தாள்.
அதனால், வாழித் திருநாமம், "பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே" என்று போற்றுகிறது.