ஆன்மிக களஞ்சியம்

மலையைக் குடைந்து உருவாக்கிய மும்மூர்த்திகளின் உருவங்கள்

Published On 2024-08-23 10:57 GMT   |   Update On 2024-08-23 10:57 GMT
  • இத்தலத்து மலையின் மீது ஒரு திருக்கோவிலும், மலை அடிவாரத்தில் ஊரின் நடுவே ஒரு திருக்கோவிலும் அமைந்து விளங்குகின்றன.
  • மலையின் மீது உள்ள கோவிலை ‘வேதகிரிக் கோவில்’ என்றும், ஊரின் நடுவே உள்ள கோவிலை ‘தாழக்கோவில்’ என்றும் கூறுகின்றனர்.

திருக்கழுக்குன்றம் மலையை சுற்றி வரும்போது விசுவாமித்திரர் தீர்த்தம் கோடி விநாயகர் தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம் ஆகியவற்றை காணலாம்.

மலைமீது உள்ள லிங்கப் பெருமானுக்கு பின்புறம் மலையைக் குடைந்து அமைத்த மும்மூர்த்திகளின் உருவங்களையும் மற்றும் பல சிற்பங்களையும் காணலாம்.

இத்தலத்து மலையின் மீது ஒரு திருக்கோவிலும், மலை அடிவாரத்தில் ஊரின் நடுவே ஒரு திருக்கோவிலும் அமைந்து விளங்குகின்றன.

மலையின் மீது உள்ள கோவிலை 'வேதகிரிக் கோவில்' என்றும், ஊரின் நடுவே உள்ள கோவிலை 'தாழக்கோவில்' என்றும் கூறுகின்றனர்.

வேதகிரீசுவரர் திருக்கோவில் மலை மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இக்கோவிலின் கருவறை பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் குடைந்து ஆக்கப்பட்டது.

போல தோன்றும். கருவறை உட்புறச்சுவர்களில் பிரம்மன், விஷ்ணு, சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறையுள் வேதகிரீசுவரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகின்றார்.

வேதகிரீசுவரர் கோவிலின் வடபக்கமாக இருக்கும் படிகளின் வழியாக இறங்கினால், குடைவரை கோவில் ஒன்றை கண்டு வழிபடலாம்.

Tags:    

Similar News