திருமண நிகழ்ச்சிக்காக பாபாவை சீரடிக்கு அழைத்துச்சென்ற சாந்த் பட்டேல்
- பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்பு சுவை மாறியது.
- சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள்.
சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது, பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார்.
பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி, அவரை சாயி என்று அழைத்தார்.
சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள். பாபா என்பது இந்தியில் "அப்பா" என்று பொருள்.
இரண்டும் இணைந்து "சாய்பாபா" என்ற திருப்பெயரே நிலைத்துவிட்டது.
சாய்பாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். சீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார்.
பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்பு சுவை மாறியது.
சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் "நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே அனுமன்!" என்று கூறினார்.
ஆமாம்! அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்!
சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியைப் போல் வாழ்ந்தார் பாபா.
அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்கள் "அவர் ஒரு மகான்" என்று போற்றினார்கள்.