ஆன்மிகம்
எந்த கடவுளின் கோவிலை எந்த இடங்கள் அமைக்க வேண்டும்
எந்தெந்த இடங்களில் எந்தெந்த கோவில்களை அமைக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
எந்தெந்த இடங்களில் எந்தெந்த கோவில்கள் அமையலாம் என்று இங்கே காணலாம்.
1. செளமிய மற்றும் போக மூர்த்திகளின் ஆலயங்கள் கிராமங்கள், நகரங்களுக்குள் அமைக்கப்படலாம். உக்கிர மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்படும் ஆலயங்கள் மக்கள் குடியிருக்கும் ஊர்களின் மத்தியில் அமைக்க ஆகமங்கள் அனுமதிக்கவில்லை. இவை ஊரின் எல்லையிலேயே அமைக்கப்படும்.
2. யோக மூர்த்திகளுக்கான ஆலயங்கள் ஊருக்குத் தொலைவில் உள்ள காடுகள் சூழ்ந்துள்ள மலை உச்சியில் அமைக்கப்பட வேண்டும்.
3. மாரியம்மன் கோவில் ஊரில் வடகிழக்கு, மேற்கு திசைகளில் அமைந்திருக்கும்.
4. சிவன் கோவில் நகரின் ஈசான (வடகிழக்கு) மூலையில் அமைக்க வேண்டும். தென்கிழக்கு மூலையில் உள்ள அக்னி பாகத்திலும் அமைக்கலாம் என காமிகா ஆகமம் கூறுகிறது. சிவலிங்கங்கள் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். சிவனின் பார்வை ஊரின் குடியிருப்பை நோக்கி இருக்கக் கூடாது. சில இடங்களில் சிவன் மேற்கு நோக்கி அபூர்வமாக அமைந்திருக்கும். அந்த சிவன் உக்கிர மூர்த்தியாவார்.
5. விஷ்ணுவின் ஆலயங்கள் ஊரின் மேற்குப் பாகத்தில் சூரியனுக்குரிய பாகத்தில் அமைக்கப்பட வேண்டும். பகவானின் திருவுருவம் கிழக்கு நோக்கி குடியிருப்புகளைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என வைகானச ஆகமமும், பல சிற்ப சாஸ்திர நூல்களும் கூறுகின்றன.
6. கருவறையும் மேலுள்ள கட்டிடப் பகுதியும், ‘விமானம்' எனவும் ‘ஸ்ரீகோவில்' என்றும் அழைக்கப்படும். வாயிலை அலங்கரிக்கும் கட்டிடப் பகுதியே கோபுரமாகும். கருவறைப்பகுதி மேல் உள்ள கட்டிடத்தை அவ்வாறு அழைக்கக்கூடாது.
7. திருடு, கொலை, கொள்ளை காரணமாகத் தீட்டு பட்டு ஆலயங்களின் புனிதம் கெட்டுவிட்டால், அதற்கென சாந்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் சடங்கிற்கு ‘அநதரிதம்' என்று பெயர்.
8. ஆலய அமைப்பிற்கு ‘கர்ஷணம்' என்று பெயர். அதில் உள்ள தெய்வச் சிலைகளுக்கு மந்திர சக்தியால் சாந்நித்யம் உண்டாகுமாறு செய்வதற்குப் ‘பிரதிஷ்டை' என்று பெயர்.
9. கும்பாபிஷேகச் சடங்கில் குறைகள் இருந்தால் அதற்குத் தக்க பரிகாரம் செய்ய வேண்டும். இதற்குப் பிராயச்சித்தம் என்று பெயர்.
10. கல்லால் செய்யப்பட்ட தெய்வ உருவச்சிலையை சன்னதியில் நிறுத்தி வைக்க வேண்டும். அதாவது கல்லோடு கல்லை ஒட்ட வேண்டும். அதற்கென ஒரு கலவை தயாரிக்கப்படும். அதற்கு அஷ்ட பந்தனம் என்று பெயர். அதில் எட்டுப் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அவை கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காலி, செம்பஞ்சு, சாதிலிங்கம், வெள்ளை மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய - எட்டுப் பொருள்களாகும், இதை ‘அஷ்டபந்தனம்' என்றும் ‘மருந்து சாத்துதல்' என்றும் சொல்லலாம். ‘அஷ்டம்' என்றால் எட்டு என்று பொருள். ‘பந்தனம்' என்றால் ஒட்டி வைத்தல் என்று பொருள்.