ஆன்மிகம்

மேட்டுப்பாளையத்தில் பூமி தோ‌ஷ நிவாரண பூஜை

Published On 2016-07-26 09:17 IST   |   Update On 2016-07-26 09:17:00 IST
மேட்டுப்பாளையத்தில் பூமி தோ‌ஷ நிவாரண பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள சர்வ மங்கள தியான பீடம் சார்பில் தியான பீட 17–ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பூமி தோ‌ஷ நிவாரண பூஜை நடந்தது. இதைதொடர்ந்து ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூமி தோ‌ஷ சர்ப்ப பூஜை, வள்ளி கும்மி ஒயிலாட்டம், பஜனை ஆகியவை நடந்தது.

அதைதொடர்ந்து ஆசியுரை மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ராமலிங்கம் தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பிரம்மரிஷிமலை காகமுனி அன்னை சித்தர் ராம்குமார் குருஜி, சுவாமி சர்வமங்கள குருஜி ஆகியோர் அருளாசி வழங்கினர். விழாவில் சர்வ மங்கள் நல் முத்துக்கள் என்ற நூலை ராம்குமார் குருஜி வெளியிட அதை நீதிபதி சுரேஷ்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் பெற்று கொண்டனர்.

Similar News