ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் காரைக்கால் அம்மையார் கோவிலில் குரு பூஜை விழா
உடன்குடி அருகே உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் குருபூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலையில் காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. இங்கு பங்குனி சுவாதியையொட்டி நடந்த குரு பூஜை விழாவில் நெல்லை காரைக்கால் அம்மையார் பக்த ஜனசபை வழிபாட்டு குழு தலைவர் முத்துகுமாரசாமி தலைமையில் அம்மையாரின் முழு பதிகமும் வரலாற்று புராணமும் முற்றோதப்பட்டு பாடல்கள் பாடி விளக்கமளித்தனர்.
நண்பகல் 1 மணிக்கு தேனி சக்திவேல் குழு வினரின் பண்ணிசை பாடப்பட்டது. ஓதுவார்களின் திருமுறை இன்னிசை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்க்கான ஏற்பாடுகளை இல்லங்குடி, சண்முகம் ஆகியோர் மேற்பார்வையில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.