வழிபாடு

அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா இன்று இரவு நடக்கிறது

Published On 2023-01-17 14:12 IST   |   Update On 2023-01-17 14:12:00 IST
  • தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • இன்று முத்துமாரியம்மன், அஷ்டலட்சுமி, சப்தகன்னியர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயிலில் 10 நாள் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு 108 வேத விற்பனர்கள் பங்கு பெறும் மஹா யாக சாலை பூஜையும், கேரளா செண்டை மேளங்கள் முழங்க மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

கோவில் தர்மகர்த்தா சிவன் பாண்டி தலையில் பானை வைத்து அம்மனாக நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்வுகள் நடைபெற்றது.

தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இத்திருவிழாவிற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் மாலை அணிவித்தும் விரதத்தை தொடங்கினர்.

10 நாட்களும் வில்லுப்பாட்டு, வான வேடிக்கை மற்றும் மேள தாளங்களுடன் அம்மனுக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு முத்துமாரியம்மன், அஷ்டலட்சுமி, சப்தகன்னியர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 11 மணி முதல் மாபெரும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. இன்று இரவு பூக்குழி இறங்குதல் திருவிழா மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறுகிறது.

திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News