கோவில்பட்டி மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக கால்நாட்டு நிகழ்ச்சி
- கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டு, அங்கிருந்து சமுதாய மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் கோவில் முன்பு வான வேடிக்கைகள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், சங்கத் துணை தலைவர் பரமசிவம் என்ற பெருமாள், மாலையம்மன் பஜனை குழு பெண்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக தனுஷ்கோடியாபுரம் தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பூபதி ரத்தினம் மஹால் திறக்கப்பட்டது.