வழிபாடு

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா 12-ந் தேதி தொடங்குகிறது

Published On 2023-07-08 14:10 IST   |   Update On 2023-07-08 14:10:00 IST
  • 15-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
  • 21-ந் தேதி ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

4-ம் திருவிழாவான 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது.

21-ந் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அன்று அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்பட்டு வயிற்றில் முளைகட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

இதில் கலந்து கொண்டு அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைகட்டிய பாசிப்பயிரை வாங்கி சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

Tags:    

Similar News