வழிபாடு
கோவில் திருவிழாவில் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுத்த பெண் பக்தர்
- இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை அருகே உள்ள செ.அகரம் கிராமத்தில் சந்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர் ஒருவர் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடைகளை எடுத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் ஆட்டின் வயிற்றை அறுத்து குட்டிகளை வெளியே எடுத்து அம்மனுக்கு படையலிட்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.