வழிபாடு

திருக்கல்யாணம் நடைபெற்றதையும், இதில் பங்கேற்ற பக்தர்களின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.

தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2023-04-26 10:25 IST   |   Update On 2023-04-26 10:25:00 IST
  • 28-ந்தேதி தமிழ் முறை லட்சார்ச்சனை நடக்கிறது.
  • 30-ந் தேதி சங்காபிஷேகம், வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், தக்கார் ஹர்சினி, தலைமை பூசாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு, நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், காலை 11 மணிக்கு மஞ்சள் நீர், இரவு 7 மணிக்கு கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு கம்பம் கலைத்தல் நடக்கிறது. 28-ந் தேதி காலை 6 மணிக்கு தமிழ் முறை லட்சார்ச்சனை, 30-ந் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News